ஞாயிறு, 26 டிசம்பர், 2021

அட நான் கொல்லலைங்க.. நிகழ்வு- 1

 

வாழ்க்கையில் எவ்வளவோ அதிசயம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஏதாவது நம் வாழ்வில் நடந்திருக்குமா என்றால் கண்டிப்பாக கேள்விக்குறிதான். ஒரு வேலை நம்ப முடியாத விஷயம் நம் வாழ்க்கையில் நடந்தால்? அதுவும் நம் வாழ்க்கையை ஒரே அடியாக புரட்டிப்போட்டால்? அப்படி என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் தான் இந்த கதைக்கு மூலதனம்.

 

இவ்வளவு அறிவா பேசுறானேன்னு நெனைக்காதீங்க . உண்மைய சொல்லனும்னா நான் ஒரு திருடன். நீங்க என்ன நெனைப்பீங்க, திருடன் வாழ்க்கையில மிஞ்சிப்போனா என்ன நடந்துருக்கும்,  திருடிருப்பான் போலீஸ் கிட்ட மாட்டிருப்பான், அதானே நெனைக்கிறீங்க. அதான் இல்ல. விக்ரம் சார் சொல்ற மாரி சொல்லனும்னா "அதுக்கும் மேல". சரி டா ரொம்ப பேசாம கதைக்கு வா அப்டினு சொல்றது தெரியுது.. இதோ..

 

நெறய பேரு, செய்யாத தப்புக்கு மாட்டி பாத்திருப்பீங்க. நானும் அப்படி தான் மாட்னேன். இதுல என்ன இருக்குனு கேக்கலாம். என்னைய  ஒரே நாள்ள திருடன்ல இருந்து கொலைகாரனா மாத்திட்டாங்க. இப்படி தானே தப்பு பண்ணாதவங்கள்லாம் மாட்டுவாங்கன்னு நீங்க கேக்கலாம். இங்க பிரச்சினையே, அவங்க என்னைய விட்டுட்டாங்க, ஆனா வாயக்குடுத்து நானே மாட்டிகிட்டேன்.

கொலைகாரன் ஆயிட்டியா? அப்பறம் என்னடா அதிசயம்னு கேக்குறீங்களா? கதையப்படிங்க தெரியும். ஹாஹா. இப்பவே சொல்லிருவேனா எல்லாத்தையும். பொறுமையா படிங்க சொல்றேன்.

என் பேரு ராசு. ஊரு கோயம்புத்தூரு. ஏதாவது பண்ணி உறுப்புற்றலாம்னு சென்னைக்கு வந்தேன். மாசக்கணக்குல வேலை தேடி அலைஞ்சேன். ஒருத்தனும் வேலை தர மாட்டேன்டான். அப்பயும் விடாம வேலை தேடிட்ருந்தேன். அப்பதான் ஊர்ல இருந்து அந்த போன் என்னைய இப்படி யோசிக்க வச்சுச்சு. எங்கம்மா வழுக்கி விழுந்து ஆஸ்பத்திரியில உசுருக்கு போராடிட்ருக்காங்க, ஒடனே அஞ்சு லட்சம் வேணுண்டாரு அப்பா. நமக்கு இங்க சோத்துக்கே வலி இல்ல, இதுல அஞ்சு லட்சத்துக்கு எங்க போறதுன்னு புலம்ப மட்டும் தன் என்னால முடிஞ்சுது.

 

ரெண்டு நாள்ல ஏற்பாடு பன்றேன்னு சொல்லிட்டு கடன் கேட்டு அலைய ஆரம்பிச்ட்டேன். ஆனா சுத்தமா கெடைக்கல. அப்பதான் கடவுளாப்பாத்து காசு குடுத்தாரு.. ஆனா அதுலயும் ஒரு ட்விஸ்ட் வச்சாரு..

3 கருத்துகள்:

அட நான் கொல்லலைங்க.. நிகழ்வு- 2

எதுல முடிச்சேன். ஹான்.. கடவுள் வச்ச ட்விஸ்டு..  அஞ்சு லட்சம் எப்டியாச்சும் சேத்துரணும்னு அலஞ்சு அலஞ்சு ஒன்னும் கெடைக்காம நொடிஞ்சு போய் ஒரு ப...